Tuesday 25 August 2015

பத்து டிக்கட் பிரிண்ட் பணத்தை ஒத்த டிக்கட்டுக்கு செலவு வைக்கும் amazon.in ம் அதற்கு துணைபோகும் irctc யும். rail ticket extra printing cost

அருகில் இருக்கும் ரயில் டிக்கட்டைப் பாருங்கள். அதில் சிவப்பு கட்டமிட்ட அடையாளத்திற்குள் amazon.in விளம்பரத்தை காணுங்கள். முழுவதும் கருப்பு கலரில். இந்த டிக்கட்டை பிரிண்ட் செய்தால் எவ்வளவு இங்க்( மை பவுடர் ) செலவாகும் என்பதை சிந்தியுங்கள். நிறைய இங்க் செலவாகும் அல்லவா! இந்த கருப்பு விளம்பரம் இல்லாமல் இருந்தால் நமக்கு பிரிண்டிங் செலவு குறைவாகத்தானே இருக்கும். நம்மைப்போல ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் பேர் டிக்கட் பிரிண்ட் செய்கிறார்கள். அத்தனை பேருக்கும் இது அதிக செலவுதானே?  ஒரு நாளைக்கு 3.50 லட்சம் பேர் டிக்கட் பிரிண்ட் செய்கிறார்கள். அப்படியானால் எவ்வளவு மை செலவாகும். இதனால் அமோசானுக்கு எத்தனை  பிரிண்டர் விற்பனையாகும். எத்தனை டோனர் விற்பனையாகும் என்று எண்ணி பாருங்கள். எல்லோருக்கும் செல்போன் இயக்க தெரிவதில்லை. எஸ்எம்எஸ் ஓப்பன் பண்ண தெரிவதில்லை் நிறையபேருக்கு மொபைல் போனும் இல்லாமல் இருக்கிறார்கள். பிரிண்ட் டிக்கட்டில்தான் நிறைய நமக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் இருக்கின்றன. எஸ்எம்எஸ்சில் இத்தனை விவரங்களும் இல்லை . இதனால் பலரும் பிரிண்ட் டிக்கட்டையே விரும்புகிறார்கள். ஆனால் irctcயோ தன்னுடைய சுயநலனுக்காக விளம்பர வருமானத்திற்காக மக்களின் பணத்தை விரயமாக்குவது எந்த வகையில் நியாயமாகும்.  மக்களே சிந்தியுங்கள். யாராவது  irctc க்கு இந்த விவரத்தை எடுத்து சொல்லி வேறு கலரில் " amason.in ” ன் விளம்பரத்தை வெளியிட  சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.

மனம் எரிந்து தரும் நன்கொடை? நாசம் தரும்! பாபம் சேரும்!

நன்கொடை முறைகள்

தமிழக அரசு நிதியுதவி - சேஷசமுத்திரம் வன்முறை: காயமடைந்த போலீஸாருக்கு

எல்லா குழந்தையும் நம் குழந்தையே- பெற்றால்தான் பிள்ளையா - கமலஹாசன் - ராஜீவ் நம்பியார்

அப்ரிடி - நிதியுதவி! 20 லட்சம் ரூபாய்! பாகிஸ்தான்- நட்சத்திர கிரிக்கெட் வீரர்
நன்கொடை


No comments:

Post a Comment