Thursday 6 August 2015

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில், வறுமைக் கோட்டிலிருக்கும் ஏழைப் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்து, சத்தான உணவு கிடைக்கச் செய்திட 2006-2007 ஆம் ஆண்டு முதல் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்படும் உதவி தொகை ருபாய் 6 ஆயிரத்திலிருந்து ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையில், முதல் தவணையாக ரூபாய் 4000/- கருவுற்ற ஏழாவது மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூபாய் 3000/- குழந்தை பிறந்த பின்பும் , பிரசவத்துக்குப் பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் 3-வது தவணையாக ரூ. 4 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள்
பயனாளி 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் வழங்கப்படும்

தகுதிகள்
நிதியுதவியைப் பெற கீழ்காணும் ஏதாவது ஒரு நிலையில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளவர்கள்.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்ட உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்கள்.
குடிசை வீடு, சிறிய ஓட்டு வீடு மற்றும் சிறிய வாடகை வீட்டில் வறிய நிலையில் வசிப்பவர்கள்.
தொகுப்பு வீடுகள், சுனாமி அழிவினால் கட்டித்தரப்பட்ட வீடுகள் மற்றும் அரசு இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள்.
விவசாயக் கூலி வேலை, சலவைத் தொழில், ஆட்டோ முதலான வாகனங்களை தினக்கூலிக்கு ஓட்டுபவர்கள்.
கல்குவாரி, சுண்ணாம்பு காளவாய், செங்கல் சூளை போன்றவற்றில் தினக்கூலிக்கு வேலை செய்பவர்கள்.
சொந்த வீடு இருந்தும் கூலி வேலை செய்பவர்கள்.
நிலமற்ற ஏழைகள்.
குடும்பத் தலைவர் பருவ காலத்திற்கு ஏற்றவாறு வெளியூர் சென்று கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்கள்
பெண்கள் குடும்பத்தலைமைப் பொறுப்பேற்ற குடும்பங்கள்.
வேலைக்குச் செல்ல இயலாதவர்கள்.

தேவையான சான்றுகள்
தாய்சேய் நல அட்டையின் நகல்
இலங்கைத் தமிழர் எனில் புலம் பெயர்ந்தோர் சான்றிதழ் நகல்.
உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினராயின் அதற்கான அட்டையின் நகல்.
வறுமைக் கோட்டிற்குட்பட்டவராக இருப்பதற்கான சான்றிதழ்.

keywords
மகப்பேறு நிதியுதவி திட்டம் , டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்  டாக்டர். மகப்பேறு நிதியுதவி, முத்துலட்சுமி, டாக்டர்.முத்துலட்சுமி திட்டம் , டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம்

No comments:

Post a Comment