Tuesday 1 September 2015

மாளவிகா யோகம் என்றால் என்ன?

சுக்ரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்கினத்திற்கு 1,4,7,10ல் இ.ருந்தால் அது மாளவிகா யோகம் என்று பெயர். சுக்கிரனுக்கு ரிஷபம், துலாம் இரண்டும் ஆட்சி வீடுகள் மீனம் உச்ச வீடு. சுக்ரன் சூரியனுக்கு அருகில் செல்லும்போது அஸ்த்கமாகிவிடும். இதனால் அதன் வலிமை குன்றிவிடும். இதனால் அது அளிக்கும் பலன்களும் குறைந்துவிடும். ரிஷபம்,துலாம்,கன்னி,மிதுனம்,மகரம் கும்பம் ஆகிய வீட்டை லக்கினமாக கொண்டவர்களுக்கு மட்டும்தான் சுக்கிரன் யோகத்தை வழங்குவார். கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும். இதனால் அனுகூலம் அற்ற ஆனால் ஏற்றமான பலன்களே கிடைக்கும். அஸதங்கமாகிய சுக்கிரனுக்கு சுபர் பார்வை யில்லாமலும் பாவிகள் சம்பந்தமும் இருந்தால் நற்பலன்கள் அது வழங்க பல தடைகள் உருவாகும். சுக்ரன் பலமிலந்து செவ்வாய ராகு ஆகியோருடன் சம்பந்தப்படுவது மாற்று பாலினத்தார் மூலம்(ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும்)  அவப்பெயர் உருவாகும்.

ரிஷபம் ஆட்சி வீட்டில் சுக்ரன் இருந்தால்
1. ரிஷப லக்னதுக்கு இது 1ம் மாளவிகா யோகம்
2. சிம்ம லக்னது்துக்கு 10ம் மாளவிகா யோகம்
3.விருச்சிகத்துக்கு 7ம் மாளவிகா யோகம்
4. கும்பத்திற்கு 4ம் மாளவிகா யோகம்
இதுபோலவே
துலாம் ஆட்சி வீட்டில் சுக்ரன் இருந்தால்
1. துலாம் லக்னத்துக்கு 1ம் மாளவிகா யோகம்
2.  மகரம் லக்னத்துக்கு 10ம் மாளவிகா யோகம்
3.  மேஷ லக்னத்துக்கு 7ம் மாளவிகாயோகம்
4.  கடக லக்னத்துக்கு 4ம் மாளவிகாயோகம்

மீனம் உச்ச வீட்டில் சுக்ரன் இருந்தால்
1. மீனம் லக்னத்துக்கு 1ம் மாளவிகாயோகம்
2. மிதுனம் வீட்டிற்கு 10ம் மாளவிகாயோகம்
3. கன்னி வீட்டிற்கு 7ம் மாளவிகாயோகம்
4. தனுசு வீட்டிற்கு 4ம் மாளவிகாயோகம்

முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் ஜாதகத்திலும் கடக லக்னத்துக்கு  4ல் துலாமில் சுக்ரன் ஆட்சிபெற்று இந்த யோகம் தந்தது. இதனால்தான் நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவியையே அமைய முடிந்தது.

நடிகர் ஜெய் ஜாதகத்தில்- அவர்களுக்கு 10ல் சுக்ரன் உ்ச்சம் பெற்று இருக்க அதனுடன் புதன் சுக்ரன் சேந்திருக்க இந்த அற்புத யோகம் அமைந்திருக்கிறது.

உசாமா பின்லேடன்  ஜாதகத்தில் அவர்களுக்கு விருச்சிக லக்னத்துக்கு 7ல் சுக்கிரன் ஆட்சி பெற்று அமைந்து இந்த யோகத்தை தந்தது . முன்னால் ஈராக் அதிபர் சதாம்உசேன் ஜாதகத்திலும் 10ல் மீனத்தில் சுக்ரன் உச்சம் பெற்று இந்த யோகத்தை தந்தது.(http://karthikjothidam.blogspot.in/2015/07/blog-post_98.html)

No comments:

Post a Comment