Wednesday 5 August 2015

6 ஆயிரம் கோடி நிதியுதவி! -ரஷ்யா யூரி அறிவிப்பு!

வேற்றுகிரகவாசிகளை கண்டறியும் முயற்சிக்கு நிதியுதவி செய்ய ரஷ்ய கோடீஸ்வரர் விருப்பம் தெரிவித்துள்ளார். பால்வெளிக்கு அப்பால் உள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள உயிரினங்களைத் தேடும் முயற்சிக்கு நிதியுதவி செய்ய ரஷ்ய கோடீஸ்வரர் விருப்பம் தெரிவித்துள்ளார். பூமியில் வாழ்பவர்கள் மட்டுமே அறிவுஜீவிகளா? அல்லது அதற்கு வெளியேயும் அறிவால் மேம்பட்ட ஜீவன்கள் உள்ளனவா? என்பதைக் கண்டறிய வானியல் நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர். வானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான அறிமுக நிகழ்ச்சி லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர் அண்டவெளியிலுள்ள வேற்றுகிரகங்களைச் சேர்ந்த சில உயிர்கள் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கலாம் என்றும், இதனைக்கண்டறிவதற்கான நேரம் வந்துள்ளதாகவும் ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யாவைச்சேர்ந்த கோடீஸ்வரர் யூரி என்பவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment