Friday 7 August 2015

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி

சென்னை,புதுப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த சம்பவத்தில் உயிரிழந்த விற்பனையாளர் செல்வம் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஐ.நா. நிதியுதவி
 இலங்கையில் நல்லிணக் கத்தை ஏற்படுத்த அந்த நாட்டுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஐ.நா. சபை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் கூறியதாவது: இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று அந்த நாட்டின் நல்லிணக்கத்துக்காக தொழில்நுட்பரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவிகளை வழங்க ஆலோசித்து வருகிறோம்.

நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி நிதியுதவி - மோடி அறிவிப்பு

நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி நிதியுதவி வழங்கப்படும் என சென்னையில் நடைபெற்ற கைத்தறி தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார்.  தேசிய கைத்தறி தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார். 1905ம் ஆண்டு சுதேசிய இயக்கம் துவங்கப்பட்ட தினத்தையே தேசிய கைத்தறி தினமாக கொண்டாட முடிவு செய்ததாக தெரிவித்தார். கைத்தறி பொருட்களுக்கான தாயகமாக இந்தியா திகழ்வதாகவும், கடந்த ஓர் ஆண்டில் 60 சதவீதம் கதர் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

நான்கு கோடி பேரை சந்திக்கிறார் ஸ்டாலின் 'நமக்கு நாமே' சுற்றுப்பயணம்

அடுத்த மாதம், 25ம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து, 'நமக்கு நாமே' என்ற பயணத்தை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் துவக்குகிறார்; நவ., 8ம் தேதி, காஞ்சிபுரத்தில் பேரணியுடன் நிறைவு செய்கிறார்.

குமரி முதல் காஞ்சி வரை ஸ்டாலின் சுற்றுப்பயணம்: சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிரதான எதிர்கட்சியான திமுக தயாராகிறது. இதன் முதற்கட்டமாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 25 முதல் நவம்பர் 8 வரை குமரியில் தொடங்கி காஞ்சி வரை 'நமக்கு நாமே' சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சசிபெருமாள் இறுதிச்சடங்கில் தி.மு.க. சார்பில் ஸ்டாலின் கலந்துகொள்வார்.. கருணாநிதி தகவல்
சென்னை : வெள்ளிக் கிழமை நடைபெறும் சசிபெருமாள் இறுதிச்சடங்கில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


போட்டோ போட்டு நியூஸ் வந்துச்சே, கருணாநிதி பார்க்கவே இல்லையா... ராமதாஸ்
23.02.2012 அன்று புதுவையில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்று பேசும் இதே ராமதாஸ், பக்கத்திலே உள்ள புதுவை மாநிலத்திலே மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி!.
நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி நிதியுதவி - மோடி அறிவிப்பு!
போட்டோ போட்டு நியூஸ் வந்துச்சே, கருணாநிதி பார்க்கவே இல்லையா?.. - ராமதாஸ்!,  சசிபெருமாள் இறுதிச்சடங்கில் தி.மு.க. சார்பில் ஸ்டாலின் கலந்துகொள்வார்.. கருணாநிதி தகவல்!

No comments:

Post a Comment